திருச்சியில் துரை வைகோவிற்கு ஆதரவாக இளைஞர் பெருமன்றம் வாக்கு சேகரிப்பு

திருச்சியில் துரை வைகோவிற்கு ஆதரவாக இளைஞர் பெருமன்றம் வாக்கு சேகரிப்பு
X

திருச்சியில் துரை வைகோவிற்கு ஆதரவாக இளைஞர் பெருமன்றத்தினர் தெருமுனை பிரச்சாரம் செய்தனர்.

திருச்சியில் துரை வைகோவிற்கு ஆதரவாக இளைஞர் பெருமன்றத்தினர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஏற்கனவே பிரச்சாரம் செய்தனர். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் செய்து விட்டு சென்றிருக்கிறார்.

இந்நிலையில் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டி நோட்டீஸ் வழங்கினர்.திருச்சி மாநகரத்துக்குட்பட்ட மேற்கு சட்டமன்றத் தொகுதி எடமலைப்பட்டி புதூரில் தொடங்கிய பிரச்சார கூட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கர்நாடக மாநில தலைவர் ஹரிஷ் பாலா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் பகுதி செயலாளர் அஞ்சுகம் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் முருகேசன் நிர்வாக குழு உறுப்பினர் விஷ்வாமறுமலர்ச்சி திமுக இளைஞரணி மாநில செயலாளர் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.திருச்சி மாநகரம் முழுவதும் இன்று பத்து இடங்களில் இந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு