திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞர் கைது

திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட அசாருதீன்.

திருச்சியில் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி தில்லைநகர் 10-வது கிராஸ் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியின் மேலாளர் திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் இன்று புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்தப் புகாரில் ESAF வங்கியின் ஏடிஎம்மை இளைஞர் ஒருவர் உடைத்து பணத்தை திருட முயற்சி செய்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட முயற்சி செய்தவர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் முகக் கவசம் அணியாமல் நடந்து வந்து ஏடிஎம்மில் உள்ள இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த இளைஞர் அசாருதீன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து வாலிபர் அசாருதீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story