திருச்சியில் பால் வாங்க சென்ற இளம்பெண் திடீர் மாயம்

திருச்சியில் பால் வாங்க சென்ற இளம்பெண் திடீர் மாயம்
X
திருச்சியில் பால் வாங்க சென்றபோது திடீர் என மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி தென்னூர் பென்ஷனர் தெருவைச் சேர்ந்த நவரத்தினம் என்பவரது மகள் திலகா(வயது 19). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு மில்லில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த தனது பெற்றோரிடம் பால் வாங்கி கொண்டு வருவதாக கூறி, விட்டு, வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பால் கடை உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் திலகாவை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!