திருச்சி அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சி அரசு மருத்துவமனை (கோப்பு படம்)

திருச்சி அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டீன் வனிதா தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் நரம்பியல்துறை டாக்டர். அருண்ராஜ் கலந்து கொண்டு பேசுகையில், 'முகம்கோணுதல், கைகால் செயலிழப்பு, தலைச்சுற்றல், கண் பார்வை இழப்பு மற்றும் பேச்சுத்திறன் இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்ட 4 மணி நேரத்திற்குள் நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தால் முழுவதும் குணப்படுத்த முடியும்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகை பிடித்தல், மது அருந்துதல், உறக்க மின்மை, அதிக கொழுப்பு, உப்பை உணவில் சேர்த்துக்கொள்வதால் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாத நோய்க்கு விலை உயர்ந்த மருந்துகள் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப் படுகின்றன. தனியார் மருத்துவமனைக்கு இணையான சிகிச்சை அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகிறது' என்றார்.

இந்நிகழ்ச்சியில் நரம்பியல் துறைத்தலைவர் சாக்ரடிஸ், டாக்டர்.ராஜசேகர், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!