திருச்சி மாநகராட்சி பள்ளியில் உலக மண் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகராட்சி பள்ளியில் உலக மண் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உலக மண் தின உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி பள்ளியில் உலக மண் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல்தலைவருமான கே.சி. நீலமேகம் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் எழிலரசி முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் உறுதி மொழியை வாசிக்க மாணவர்கள் ,ஆசிரியர்கள் அதனை திரும்ப படித்து உறுதி மொழி ஏற்றனர்.

இந்நிகழ்வில் மண்வளம் காக்க நாட்டு மரக்கன்றுகள், நடுதல், இருக்கும் மரங்களை வெட்டாமல் தடுத்தல், காத்தல், வளர்த்தல் மற்றும் நிலவளம், நிலத்தடி நீர், நிலத்தில் நச்சுக் கழிவுகள், குப்பைகள் கொட்டாமல் வளமாய் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் என்று உறுதிமொழியும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ஐம்பெரும் பூதங்களில் ஒன்றான நிலம் அதாவது மண் பற்றிய விழிப்புணர்வினை எதிர்கால சந்ததியினருக்கு பள்ளி பருவத்திலேயே ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

Tags

Next Story