திருச்சி வளர்ச்சி குழுமம் சார்பில் உலக வன தினவிழா கொண்டாட்டம்

திருச்சி வளர்ச்சி குழுமம் சார்பில் உலக வன தினவிழா கொண்டாட்டம்
X

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு பள்ளியில் உலக வன தின நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி வளர்ச்சி குழுமம் சார்பில் உலக வன தினவிழாஎடமலைப்பட்டி புதூர் அரசு பள்ளியில் கொண்டாடப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எடமலைப்பட்டி புதூர் தொடக்கப் பள்ளியில் திருச்சி வளர்ச்சி குழுமம் சார்பில் உலக வன தின விழா கொண்டாடப்பட்டது.

மாநகராட்சி தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர்எழில் ஏழுமலை தலைமை வகித்தார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா, திருச்சி வளர்ச்சி குழும தலைவர் வழக்கறிஞர் திலீப், செயலாளர் யோகா விஜயகுமார், பொருளாளர் கதிரவன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரேம் குமார், கமலக்கண்ணன், பிளட் ஷாம், அமைப்பாளர் ரியாஸ், பாட்ஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிராமாலயா தொண்டு நிறுவனர் பத்மஸ்ரீ தாமோதரன் வாழ்த்துரை வழங்கினார்.

திருச்சி மாவட்ட உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் பேசுகையில்,உலக வன நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் (UN) பரிந்துரையின் பேரில் அனுசரிக்கப்படுகிறது.இந் நாளில் காடுகளைப் பற்றி மட்டுமல்ல, காடுகளுக்கு வெளியே உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றி எதிர்கால சந்ததியினருக்கு பசுமையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகிறது. இந் நாள் உயிரினங்களின் வாழ்வில் காடுகளின் மதிப்பை நினைவூட்டுகிறது.

நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து நாம் பயன்படுத்தும் மரம் வரை காடுகளை நம்பியே வாழ்கிறோம். விலங்குகளுக்கு வாழ்விடங்கள் மற்றும் மனிதர்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்குவதைத் தவிர, காடுகள் நீர்நிலைப் பாதுகாப்பையும் வழங்குகின்றன, மண் அரிப்பைத் தடுக்கின்றன மற்றும் காலநிலை மாற்றத்தைத் தடுக்கின்றன என்றார்.

தொடர்ந்து இயற்கை சார்ந்த வினாடி வினா நிகழ்வில் சரியாக பதிலளிக்கும் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

முன்னதாக திருச்சி வளர்ச்சி குழும துணைத் தலைவர் தங்கமணி வரவேற்க முகமது ஷரீப் நன்றி கூறினார். திருச்சிராப்பள்ளி வளர்ச்சிக் குழும நிர்வாகிகள் ரியாஸ் பாட்ஷா, மிலிட்டரி, நடராஜன், பூபாலன், டாக்டர் நவீன் மணி, மோகன், முகமது ஷரீஃப், கோபால், சையது முஸ்தபா, முகமது உமர் கதாப், மல்லீஸ்வரி முத்துச்செல்வி, சாந்தி பன்னீர்செல்வம், சீனிவாச பிரசாத், ருக்மணி, லிவிங்ஸ்டன் தாஸ், சீனிவாசன், வழக்கறிஞர் இராக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business