திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக  எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் சிவராசு தலைமையில்  நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் தேதி உலக எய்ட்ஸ் தினம் ஆக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உலக எய்ட்ஸ் தின நிகழ்வில் கலெக்டர் சிவராசு எய்ட்ஸ் தின உறுதிமொழி படிக்க அதனை அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் திரும்ப படித்து உறுதி எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் கலெக்டர் சிவராசு கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் கலெக்டர் வழங்கினார்.

முசிறி, தொட்டியம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நம்பிக்கை மையங்களுக்கு விருதும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது. மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி, அரசு மருத்துவ கல்லூரி டீன் வனிதா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story