/* */

திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்

திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
X

திருச்சியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்த பயிலரங்கை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி எஸ்.ஆர்.எம். ஓட்டலில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான மண்டல அளவிலான பயிலரங்கம் இன்று நடைபெற்றது. இந்த பயிலரங்கை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் பேசியதாவது:-

குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடைசெய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் என்பது சமூக மற்றும் பொருளாதார காரணிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், குழந்தை தொழிலாளர் முறை அகற்றப்படுவதில் நாளைய இந்தியாவின் எதிர்காலம் உள்ளது என்றும், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது தொடர்பான சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை அமலாக்கம் செய்வதில் உள்ள தடைகள் கண்டறியப்பட்டு, அத்தடைகளை அகற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியப்பட வேண்டும் என்றும், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை மீட்டெடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராத தொகை உரிய குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கு சென்று சேர வேண்டும், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா;கள் பள்ளியில் சோ;க்கப்படுவது, அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு செல்கிறார்களா என்பதை கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களின் மறுவாழ்வு குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், அhpயலூர், பெரம்பலூர், தேனி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலகுழு மற்றும் சுகாதாரத் துறை, கல்வித் துறை சைல்டு லைன் சமூக பாதுகாப்புத் துறை, போலீசார் சுகாதாரத்துறை, ஆதிதிராவிட நலத்துறை, மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்ட 150 நபர்கள் கலந்து கொண்டனர்.

2025-ம் ஆண்டுக்குள் பல்வேறு வல்லுநர்கள், சட்டத்துறை பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் கொண்டு கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் நடைமுறை, சவால்கள், சட்ட அமலாக்கம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக பயிற்றுவிக்கப்பட்டது.

மேலும், 2025-ம் ஆண்டிற்குள் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் குழந்தை தொழிலாளா; முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தொழிலாளர்நல கூடுதல் ஆணையர்ஜெயபாலன், தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன்;, இணை ஆணையர்கள் திவ்யநாதன், கோவிந்தன், உதவி ஆணையர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 March 2023 5:04 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!