திருச்சி கோட்டை பகுதியில் வீட்டில் தனிமையில் இறந்து கிடந்த தொழிலாளி

திருச்சி கோட்டை பகுதியில் வீட்டில் தனிமையில் இறந்து கிடந்த தொழிலாளி
X
திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்).
திருச்சி கோட்டை பகுதியில் தனிமையில் வீட்டில் இறந்து கிடந்த தொழிலாளியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

திருச்சி கீழ தேவதானத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50). காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி மற்றும் பிள்ளைகள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளப்பட்டிக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் செல்வக்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வெளியே சென்று விட்டு சுமார் 12 மணியளவில் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். அதன் பிறகு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று (08.12.2021) மதியம் அருகில் வசிக்கும் சிறுவன் ஒருவன் செல்வக்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால்,பூட்டு போடாமல் சாத்தியிருந்த கதவை திறந்து பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அருகில் உள்ள உறவினர்கள் வந்து பார்த்துள்ளனர். அப்போது செல்வக்குமார் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடத்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் சென்று செல்வகுமாரின் உடலை கைப்பற்றி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future