திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X
திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி புத்தூர் வடக்குமுத்துராஜா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (58). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் அதிக மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். மேலும் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதை அவரது மனைவி நிர்மலா கண்டித்தார். இந்தநிலையில் ஆரோக்கியசாமி நேற்றுமுன்தினம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார்.

அப்போது நிர்மலா கண்டித்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த ஆரோக்கியசாமி நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நிர்மலா உறையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!