மகளிர் கைப்பந்து போட்டியில் திருச்சி இந்திரா காந்தி கல்லூரி முதலிடம்

மகளிர் கைப்பந்து போட்டியில் திருச்சி இந்திரா காந்தி கல்லூரி முதலிடம்
X

பல்கலைக்கழக அளவிலான மகளிர் கைப்பந்து போட்டியில் திருச்சி இந்திரா காந்தி கல்லூரி முதலிடம் பிடித்தது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டியில் இந்திரா காந்தி கல்லூரி முதலிடம் பிடித்தது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்து மகளிர் போட்டியின் நிறைவு விழா இந்திரா காந்தி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலிடம் பெற்ற ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரிக்கு கோப்பையை வழங்கினார்.

அருகில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி துறை செயலர் மற்றும் தலைவர் முனைவர் ஆர்.கலைதாசன், கல்லூரி முதல்வர் முனைவர் வித்யாலட்சுமி, மகளிர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவக்குமார் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story