/* */

ஆற்றில் மூழ்கிய 2 சிறுவர்களை காப்பாற்றிய பெண்ணுக்கு போலீஸ் ஐ.ஜி. பாராட்டு

ஆற்றில் மூழ்கிய 2 சிறுவர்களை காப்பாற்றிய பெண்ணுக்கு போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஆற்றில் மூழ்கிய 2 சிறுவர்களை காப்பாற்றிய பெண்ணுக்கு போலீஸ் ஐ.ஜி. பாராட்டு
X

தண்ணீரில் மூழ்கிய 2 சிறுவர்களை காப்பாற்றிய பெண்ணிற்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அலவந்திபுரத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் கடந்த 13-ந்தேதி கபிஸ்தலம் கங்காதரபுரம் காவிரி ஆற்றுப்பகுதியில் குளித்து கொண்டிருந்த போது அந்த சிறுவர்கள் நீரில் மூழ்கினர். அப்போது அலவந்திபுரம் நடுத்தெருவை சேர்ந்த சரோஜா (வயது 60) என்பவர் தனது புடவை மூலம் 2 சிறுவர்களை காப்பாற்றினார். மற்றொரு சிறுவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தான். ஆற்றில் மூழ்கிய 2 சிறுவர்களை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சரோஜாவின் வீரதீரச் செயலை பாராட்டும் வகையில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Updated On: 18 Jan 2022 8:49 AM GMT

Related News