திருச்சி பாலக்கரையில் வயிற்று வலியால் பெண் தற்கொலை

திருச்சி பாலக்கரையில் வயிற்று வலியால் பெண் தற்கொலை
X
திருச்சி பாலக்கரையில் வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தனமணி காலனியை சேர்ந்த பிரேம்குமாரின் மனைவி வனஜா (வயது 46). இவர் நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமாகவே விஷத்தை தின்று விட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.

பின்னர் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி