திருச்சியில் பட்டபகலில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சியில் பட்டபகலில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
X
திருச்சியில் பட்டப்பகலில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி வயலூர் ரோடு அம்மையப்ப நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் விருத்தாசலத்தில் ஸ்வீட் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கனிமொழி (வயது 47).கனிமொழி நேற்று பகல் சீனிவாசன் நகர் 8-வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் கனிமொழியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை மின்னல் வேகத்தில் பறித்துக்கொண்டு தப்பினார். இதை சற்றும் எதிர்பார்க்காத கனிமொழி அதிர்ச்சி அடைந்து திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

உடனடியாக மைக் மூலம் அனைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உஷார் படுத்தப்பட்டனர். புத்தூர் நால்ரோடு, கோர்டு எம்.ஜி.ஆர். சிலை, தலைமை தபால் நிலையம், டி.வி.எஸ். டோல்கேட், உறையூர், தில்லைநகர் உட்பட முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி, குறிப்பிட்ட அடையாளம் சொல்லப்பட்டு பெண்ணிடம் சங்கிலி பறித்த கொள்ளையன் தீவிரமாக தேடினார்கள். ஆனாலும் கொள்ளையனை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அரசு மருத்துவமனை போலீசார் இந்த சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்