திருச்சி மாவட்ட விவசாயிகளுடன் மு.க. ஸ்டாலின் காணொலி கலந்துரையாடல்

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு, மேயர் அன்பழகன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் 2003 முதல் 2013 வரை 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கக் கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தினை இன்று சென்னையில் நடைபெற்ற விழா நிகழ்வில் தொடங்கிவைத்து, விவசாயிகளுடன் கலந்துரையாடி,ஒரு லட்சமாவது பயனாளிக்கு இலவச மின் இணைப்பு ஆணையை வழங்கி சிறப்பித்தார்.
இதனையொட்டி திருச்சி மன்னார்புரம் , காஜா நகர் வி.எஸ்.எம். மஹாலில் விழா நிகழ்வு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் .கே .என் .நேரு,மாநகராட்சி மேயர் அன்பழகன் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) இரா .அபிராமி, மாவட்டப் பிரமுகர் .வைரமணி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக தலைமைப் பொறியாளர் அருள்மொழி, மேற்பார்வைப் பொறியாளர் வீரமுத்து மற்றும் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் வாரியப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒரு இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 3115 பேர் உள்பட திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை,தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம்,கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 672 விவசாயிகள் இலவச மின் இணைப்பினைப் பெற்று பயன் பெற்றுள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்ற, இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகள் முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu