திருச்சியில் மனைவியை கீழே தள்ளி கொலை செய்த 2-வது கணவர் கைது

திருச்சியில் மனைவியை கீழே தள்ளி கொலை செய்த 2-வது கணவர் கைது
X

கைது செய்யப்பட்ட கோபால்

திருச்சியில் மனைவியை கீழே தள்ளி கொலை செய்த இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று முதல் கணவரிடம் விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோபால் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையே நேற்று குடிபோதையில் வந்த கோபால் அனிதாவிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி தர சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது. அனிதா கடன் வாங்கி தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் போதையில் இருந்த கோபால், அனிதாவை கோபத்தில் கீழே தள்ளி விட்டதில் அருகில் இருந்த கேஸ் சிலிண்டரில் விழுந்துள்ளார், இதில் தலையில் அடிபட்டு மயங்கி கீழே விழுந்தார். இது குறித்து தகவலறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனிதாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி அனிதா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அனிதாவின் இரண்டாவது கணவர் கோபாலை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story