திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை
X
பைல் படம்.
திருச்சி மாவட்டத்தில் இன்று காலை வரை பரவலாக மழை பெய்து உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலையில் சிறிது நேரம் மழை பெய்தது. இரவிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இன்று காலை 8 மணிவரை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதிவான மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி ஜங்ஷனில் அதிகபட்சமாக 11.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் பொன்மலையில் 7.20, மருங்காபுரியில் 5.20, திருச்சி டவுனில் 5.10 ,மணப்பாறையில் 2.80 ,தென்புற நாட்டில் 4.00, திருச்சி விமான நிலையம் பகுதியில் 1.70 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 1.55மி.மீ. மழையும், மொத்தம் 37.3மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
ai marketing future