வேட்பு மனு நிராகரிக்கப்படாமல் இருக்க வேட்பாளர் செய்ய வேண்டியது என்ன?

வேட்பு மனு நிராகரிக்கப்படாமல் இருக்க வேட்பாளர்  செய்ய வேண்டியது என்ன?
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதுபற்றிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு, அதனடிப்படையில் வேட்புமனுத்தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4ஆம் தேதி மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். ஏழாம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பிற விரும்புவோர்கள் வாபஸ் பெறலாம். இதனால் அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளின் 1,374 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 138 நகராட்சிக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 490 பேரூராட்சிகளின் 7,621 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தம் 12,838 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுக்கள் பிப்ரவரி 5ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். பரிசீலனையின் போது வேட்பாளரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படாமல் இருப்பதற்கு வேட்பாளர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது பற்றி தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அது வருமாறு:-

வேட்பு மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாளன்று குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளரின் வேட்பு மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். பரிசீலனையின் போது வேட்பாளரை முன்மொழிந்தவர் மற்றும் வேட்பாளர் அங்கீகரித்த ஒரு நபரோ தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலனை நடவடிக்கைகளை கவனிக்கலாம். இவரை தவிர வேறு எவரும் இருக்கக் கூடாது.

பரிசீலனையின் போது ஏதாவது மறுப்பு தெரிவிக்க வேண்டி இருந்தால் அதனை எழுத்து மூலமாக தேர்தல் நடத்தும் அலுவலர் குறிப்பிடும் நேரத்திற்கு முன் தெரிவிக்கவேண்டும். வேட்பு மனு குறித்து சக வேட்பாளர்கள் சார்பாக முன்மொழிந்தவர் அல்லது அங்கீகரிக்கப்பட்டவர் ஆட்சேபனைகள் அல்லது மறுப்புரைகள் தாக்கல் செய்தால் அந்த ஆட்சேபனைகளை தேர்தல் நடத்தும் அலுவலர் நிர்ணயிக்கும் காலத்திற்குள் சம்பந்தப்பட்ட வேட்பாளர் முறியடிக்க வேண்டும்.

ஒரு வேட்பு மனு குறித்த மறுப்புரைகள் ஏற்கப்படின் தேர்தல் நடத்தும் அலுவலர் அந்த மனுவை நிராகரித்து ஆணையிடுவார். அவரது ஆணையேஇறுதியானது. வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அந்த வேட்பாளர் தேர்தலில் போட்டியிட இயலாது.

இது குறித்து திருப்தி அடையாவிட்டால் கோர்ட்டில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வழக்கு தொடர முடியும். இதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர் ஆகி மேயராகவோ, நகராட்சி ,பேரூராட்சி தலைவராகவோ வரவேண்டும் என கனவு காணும் வேட்பாளரின் கனவு நிறைவேறாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை சந்திக்க சந்திக்க முன்வர வேண்டும்.

மேலும் வேட்புமனு முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால் குறிப்பாக வேட்புமனுவில் வேட்பாளரை அல்லது பெயரை முன்மொழிந்தவர் கையொப்பமிட தவறி இருந்தால் வேட்பு மனுவுடன் இணைத்து அனுப்ப வேண்டிய ஒப்புறுதி பகுதிகளை ஒப்பமிட்டு இணைக்க தவறி இருந்தால் உரிய காப்புத் தொகை செலுத்தாது இருந்தாலும் நிராகரிக்கப்படும். வேட்பாளர் பெயரை முன்மொழிந்தவர் வேட்பாளர் எந்த வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து உள்ளாரோ அந்த வார்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருந்தால் நிராகரிக்கப்படும்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவராக இருப்பின் அதற்கான சான்று இணைக்கப்படவில்லை என்றால் நிராகரிக்கப்படும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட இடம் தவிர பிற இடங்களில் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தால் அல்லது நேரம் கடந்து மனு தாக்கல் செய்தால் குறிப்பிட்ட படிவத்தில் இல்லாதது போன்ற காரணங்களால் நிராகரிக்கப்படும்.

எனவே இந்த விதிமுறைகளை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக வேட்பாளர் ஒரு முறைக்கு இருமுறை படித்து தெளிவு பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!