திருச்சி மாநகர பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து

திருச்சி மாநகர பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து
X
திருச்சி மாநகர பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நீர்ப்பணி நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம், கலெக்டர்வெல் அய்யாளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையம் மற்றும் ஜீயபுரம் - பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்திடும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது.

இதன் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும், டர்பைன் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர் , ஆல்ஃபா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் கல்லாங்காடு ஆகிய பகுதிகளிலும் கலெக்டர்வெல் அய்யளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் புகழ் நகர், பாரிநகர் , எல்லைக்குடி , காவிரி நகர், கணேஷ் நகர், சந்தோஷ் நகர், ஆலத்தூர் , கல்கண்டார்கோட்டை , திருவெறும்பூர் வள்ளுவர் நகர், திருவெறும்பூர் ஒன்றிய காலனி, மற்றும் பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ்நகர், ஜெயாநகர், மற்றும் பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை(9-ந் தேதி) ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. 10-ந்தேதி முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai healthcare products