திருச்சி நகரில் இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குடிநீர் வினியோகம்
திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு பழுதாகியுள்ளதால் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைய அதிகபட்சமாக 2 மாத காலம் தேவைப்படுவதால், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் குடிநீர் உந்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கீழ்க்கண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளான அரியமங்கலம், மலையப்ப நகர், ரயில் நகர், முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு, மேலகல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், விவேகானந்தர் நகர், கீழகல்கண்டார் கோட்டை, அம்பேத்கர் நகர், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலெட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம், தெற்கு உக்கடை, திருவெறும்பூர், வள்ளுவர் நகர், பழைய எல்லக்குடி, ஆலத்தூர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 35 மேல்நிலைநீர்தேக்க தொட்டிகளுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
மேலும் பொன்மலைப்பட்டி மற்றும் சுப்ரமணிய நகர் தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளிலிருந்து வழங்கப்படும் மத்திய சிறைச்சாலை, சுந்தர் ராஜன் நகர், ஜே கே நகர், செம்பட்டு, காஜாமலை EB காலனி, பழைய காஜாமலை, ரங்கா நகர், சுப்ரமணிய நகர், வி.என் நகர், தென்றல் நகர், கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டி புதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் EB காலனி, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர், LIC Colony New, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர்,தென்றல் நகர், ஆனந்த் நகர்,சத்தியவானி கேகேநகர் மற்றும் சுப்ரமணிய நகர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 32 மேல்நிலைநீர்தேக்க தொட்டிகளுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
தற்காலிகமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சீர்செய்யும் வரை, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu