சாதனை புரிந்து திரும்பிய வீரருக்கு ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பில் சிறப்பான வரவேற்பு
உலக சாதனை புரிந்தவருக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் தடகள விளையாட்டு பயிற்சியாளர்கள் முனியாண்டி மற்றும் சுரேஷ்பாபு ஆகியோரிடம் விளையாட்டு பயிற்சி பெற்ற தடகள விளையாட்டு வீரர் பிரேம் ஆனந்த் கேரளா மாநிலம் கொச்சியில் 30 நொடிகளில் 71 புஷ்அப் சாதனை செய்து International book of world record சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் கயத்தார் ஆகும். இவரது தாய் தந்தை இருவரும் மூணாரில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டு திருச்சியில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து கொண்டு பயிற்சியாளர் முனியாண்டியிடம் பயிற்சி பெற்று வந்தார்.
கேரளா மாநிலம் கொச்சியில் சாதனை புரிந்து விட்டு திருச்சிக்கு வருகை புரிந்த பிரேம் ஆனந்துக்கு திருச்சி ரயில் நிலையத்தில், மாற்றம் அமைப்பு மற்றும் காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரேம் ஆனந்த்தின் பயிற்ச்சியாளர்கள் முனியாண்டி, சுரேஷ்பாபு, திருச்சி கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலை ஆய்வாளர் அரங்கநாதன், மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ், வழக்கறிஞர் கார்த்திகா, தடகள விளையாட்டு வீரரும் ரயில்வே ஊழியருமான கமால், ஹக்கிம், சிவகுமார்,
ஐஎன்டியுசி- ன் அமைப்பு செயலாளர் சரவணன் ரத்தினம், செந்தில், முரளி, சந்தோஷ், அன்ஸிகா மற்றும் காவேரி ஸ்போர்ட்ஸ் அகடாமியை சேர்ந்த திரளான விளையாட்டு வீரர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu