வார்டு எண் 61 ஆக மாறி தேர்தலை சந்திக்கிறது திருச்சி ஜே.கே.நகர்

வார்டு எண் 61 ஆக மாறி தேர்தலை சந்திக்கிறது திருச்சி ஜே.கே.நகர்
X
35வது வார்டாக இருந்த திருச்சி ஜே.கே.நகர் தற்போது வார்டு எண் 61 ஆக மாறி மாநகராட்சி தேர்தலை சந்திக்கிறது.

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வார்டுகளின் எல்லைகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு பழைய வார்டு எண்களுக்கு பதில் புதிய எண்கள் கொடுக்கப்பட்டது.

புதிதாக மாற்றம் செய்யப்பட்ட எண்களின் அடிப்படையிலேயே மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதன்படி 65 வார்டுகளின் எண்களும் மாற்றப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகள் மற்றும் தெருக்களும் மாற்றம் கண்டு உள்ளன.

இதன்படி இதுவரை வார்டு எண் 35என்ற பெயரில் இருந்த ஜேகே நகர் வார்டு எண் 61 ஆக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வார்டு எண் 61ல் ஜே.கே.நகர் நகர் மற்றும் அதன் விரிவாக்க பகுதியான செகன்ட் லே அவுட், ஆர்.எஸ். புரம், ஆர்.வி.எஸ்.நகர், கக்கன் காலனி, காமராஜ்நகர், பாரதிநகர், செம்பட்டு ஆகிய பகுதிகள் இடம் பெற்று இருப்பதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
marketing ai tools