திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: ஆணையர் வெளியிட்டார்
திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார்.
திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி மைய அலுவலகத்தில், ஆணையர் முஜிபுர் ரகுமான் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு இன¦று (09.12.2021) வழங்கினார்.
திருச்சி மாநகராட்சி வார்டு எண்.1 முதல் 65 வரை மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளில் வாக்காளர்கள் மொத்தம் 7 லட்சத்து 74 ஆயிரத்து 415 உள்ளார்கள். ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 75 ஆயிரத்து 397, பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 900, திருநங்கைகள் 118 வாக்காளர்கள் உள்ளார்கள் என்ற விவரத்தினை ஆணையர் தெரிவித்தார்.
இந்த வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்சியில் உதவி ஆணையர்கள் தயாநிதி , சண்முகம், அக்பர்அலி, கமலகண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu