இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கிய தன்னார்வ கூட்டமைப்பினர்

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கிய தன்னார்வ கூட்டமைப்பினர்
X

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஆதரவு கடிதம் வழங்கிய தன்னார்வலர்கள் கூட்டமைப்பினர்.

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கிய தன்னார்வ கூட்டமைப்பினர் அதற்கான கடிதத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கொடுத்தனர்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சமூக செயல்பாட்டு அமைப்பு குழுவினர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியை சந்தித்து இண்டியா கூட்டணிக்கு தங்களது ஆதரவு கடிதத்தை வழங்கினார்கள்.

இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் கணேசன் கூறியதாவது:-

எங்கள் அமைப்பில் 2800 + தன்னார்வ அமைப்புகள் மற்றும் முன்னாள் வாழ்ந்து காட்டுவோம் திட்டப் பணியாளர்கள் சங்கம் அங்கத்தினர்களாக உள்ளனர். நடைபெற உள் மக்களவைத் பொதுத் தேர்தல் 2024-ல் இண்டியா கூட்டணியின் சார்பாக 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து எங்கள் குழுவினர் சட்டமன்ற தொகுதி வாரியாகவும், வட்டார, ஒன்றிய அளவிலும் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னாள் வாழ்ந்து காட்டுவோம் திட்டப்பணியாளர்கள் மகளிர் கூட்டமைப்புகள், இளைஞர் மற்றும் மக்கள் நலஅமைப்புகள் ஒருங்கிணைத்து தொகுதி முழுவதும் தாங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் களப்பணியாற்றிட தீர்மானித்து களப்பணி ஆற்றி வருகிறோம்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு எங்கள் அமைப்பு சார்பாக ஆதரவு தெரிவித்து வெற்றி பெற எங்கள் அமைப்பு சார்பாக அனைத்து அங்கத்தினர்கள் மூலம் வாக்களிப்பு பிரச்ச மேற்கொண்டு வருகிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மீண்டும் சூரியன் உதயமாகிறது. பல்வேறு தரப்பட்ட கருத்துக்கணிப்புகள் பலவிதமாக கூறப்பட்டாலும் கூட அடித்தள மக்களிடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக பெயர் பெற்றிருக்கிறது. பல நல்ல திட்டங்கள் மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகின்றன. சாதாரண மக்கள் மட்டுமல்லாது நடுத்தர மக்கள் எவ்வாறு பயன்பெற வேண்டும், எவ்வாறு ஆற்றல் பெற்ற மனிதர்களாக இருக்க வேண்டும் என்று கருத்தில் வைத்து சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் தமிழ்நாட்டின் சிறப்பு திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற்றார்கள் என்பது நிதர்சன உண்மை.

இது அடித்தள மக்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கிறது. மக்கள் பயனடைந்து பெருமை அடைந்திருக்கிறார்கள். மேலும் பல திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு மாநில அரசு தயார் நிலையில் இருக்கிறது. அதை செயல்படுத்த துறை அமைச்சர்களும் எப்போதும் பம்பரமாக சுழன்று கொண்டே இருக்கிறார்கள். முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சிறப்பு பிரிவும் மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகின்றன. உடனடியாக தகவல் கிடைக்கப்பெற்று மக்கள் பயனடந்து நன்மை அடைந்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே, இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது. இன்றைய காலகட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பினையும், தொழில் முனைவோராகவும், மாற்றுவதற்கு உண்டான சிறப்பான பல திட்டங்கள் தமிழ்நாடு அரசில் இருக்கின்றன. மேலும் திறன் வளர்ப்பதற்கென்று தமிழ்நாடு திறன் வளர்ச்சிக் கழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகின்றன. மேலும் இளைஞர்களுக்கு மற்றும் மகளிர்களுக்கு மாணவ, மாணவியர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் விளையாட்டு மேம்பாடு என்பது முக்கியத்துவம் அவசியமாகிறது.

அதன் அடிப்படையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக விளையாட்டு மேம்பாட்டையும், இளைஞர் மேம்பாட்டையும் முன்னிலைப்படுத்தி தமிழ்நாட்டை வளம் செய்துவருகிறார். அதனை செம்மைப்படுத்தும் வகையிலும் மேலும் இந்த திட்டங்கள் மக்களை விழிப்புணர்வு அடைய செய்வதற்கும் தமிழ்நாடு சமூக உரிமைகள் கூட்டமைப்பு மற்றும் NGO கூட்டமைப்பும் விழிப்புணர்வுகளையும் தொடர்ந்து வருகின்ற காலகட்டத்தில் கிராமப்புற விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவும் சமூக உரிமைகள் கூட்டமைப்பு அதனை சார்ந்து இருக்கிற 2800-க்கும் மேற்பட்ட NGO-க்கள் களத்தில் பணியாற்றும் இந்த தேர்தல் களத்திலும் கூட 2800 NGO-க்கள் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து மற்றும் அதன் கூட்டாளிகளை ஆதரித்தும் சிறப்புப்படுத்தும்.

இது மாநில அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சென்றடைய செய்வதே தமிழ் நாடு சமூக உரிமைகள் கூட்டமைப்பின் தலையாய நோக்கமாகும். தமிழ்நாடு சமூக உரிமைகள் கூட்டமைப்பின் கீழ் 2800 NGO-க்கள் செயல்பட்டு கொண்டு வருகின்றன. வரும் ஆண்டிற்குள், இன்னும் ஓராண்டிற்குள் தமிழ்நாட்டில் 10,000 இளைஞர்களை நல் வழிப்படுத்தி பயிற்சிகள் அளித்து கிராமப்புற விளையாட்டு இயக்கத்தை வலுப்பெற செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!