திருச்சியில் நாளை மறுநாள் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம்

திருச்சியில் நாளை மறுநாள் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம்
X

பைல் படம்.

திருச்சி ஜோசப் கல்லூரியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.

திருச்சி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. 5-ந்தேதியும் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் அணியினர் 4-ந்தேதி காலை 7 மணிக்கும், பெண்கள் அணியினர் 5-ந்தேதி காலை 7 மணிக்கும் வரவேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இறுதிப் போட்டி 5-ந்தேதி மாலை 6 மணிக்கு மின்னொளியில் நடைபெறும். வெற்றி பெறும் அணியினருக்கு பரிசு, சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

இந்த தகவலை திருச்சி மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் எஸ்.கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!