திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு இந்து மகா சபா மாலை அணிவித்து மரியாதை

திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு  இந்து மகா சபா மாலை அணிவித்து மரியாதை
X

திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு அகில இந்திய இந்து மகா சபா சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சியில் வ.உ.சி, சிலைக்கு அகில இந்திய இந்து மகா சபா சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 85-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய இந்து மகாசபா மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் ராகுல்ஜி தலைமையில் அந்த அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் மாரிஜி, புறநகர் மாவட்ட செயலாளர் ராஜா என்கிற வீரசிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!