திருச்சியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பங்ளாதேஷில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பங்களாதேஷில் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதை கண்டித்தும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் இன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளர் சேதுராமன் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

இதில்அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் மாநில செயலாளர் சுசிலா,அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பிரிவு நிர்வாகி நந்த புத்தரதாசா,பஜ்ரங் தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்,இந்து முன்னணி மாவட்ட செயலாளர்சுரேஷ்பாபு,பாரதீய ஜனதா கட்சி மலைக்கோட்டை பகுதி மண்டல் தலைவர் மகேந்திரன், மலைக்கோட்டை பிரகண்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளர் சேதுராமன் ஜி கூறும்போது இந்த ஆர்ப்பாட்டம் என்பது துரதிஷ்டமானது. இன்றும் உலகில் பல நாடுகளில் இந்துக்கள் நல்ல முறையில் வாழ்ந்து வரும் நிலையில் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் மட்டும் இந்துக்கள் மீது வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல்வேறு சேவை மற்றும் ஆன்மீக காரியங்களை செய்து வரும் இந்துக்கள் மீது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் நடைபெற்று வரும் தொடர் வன்முறை சம்பவங்களால் இந்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. 1951-ல் 22 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. 4 நாட்களில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது என்றும் பத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டும், சிலைகள் சேதப்படுத்தப்பட்டு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே இந்நாடுகளில் கோர முகத்துடன் காணப்படும் இஸ்லாத்தை ஒடுக்கி, அன்பு முகம் மலர நடவடிக்கை எடுக்க பங்களாதேஷ் அரசை, மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். தேச விரோத சக்திகள் எங்கிருந்தாலும் அது ஒடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பெரிய கோவில்கள் இருக்கிறது. இடித்தால் கட்ட முடியாது. எனவே தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும். அதே நேரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

முடிவில் விஷ்வ இந்து பரிஷத் சேவாக் பிரமுக் மாவட்ட தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Next Story