நன்னடத்தையை மீறிய 2 ரவுடிகள் கமிஷனர் உத்தரவின்படி சிறையில் அடைப்பு

நன்னடத்தையை மீறிய 2 ரவுடிகள் கமிஷனர் உத்தரவின்படி  சிறையில் அடைப்பு
X

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்.

திருச்சியில் நன்னடத்தையை மீறிய 2 ரவுடிகள் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மாநகர், காந்திமார்க்கெட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ரவுடிகளான ஹரிஹரசுதன் மற்றும் வீரமணி ஆகியோர் கடந்த18.10.2021-ம் தேதியன்று நிர்வாக செயல்துறை நடுவர் கோர்ட் முன்புஆஜர் படுத்தப்பட்டு ஒருவருடகாலத்திற்கு பொது அமைதிக்குபங்கம் விளைவிக்க மாட்டோம்,குற்றச்செயல்களில்ஈடுபடமாட்டோம் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை வழங்கியிருந்தனர்.

ஆனாலும் அவர்கள் பிரமாண பத்திரத்தை மீறி வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டதால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படி அவர்கள் மீது காந்திமார்க்கெட் போலீசார் வழக்குபதிவு செய்து நிபந்தனைகளைமீறியதற்காக ரவுடிகள்ஹரிஹரசுதன் மற்றும் வீரமணிஆகியோரை நேற்று நிர்வாகசெயல்துறை நடுவர் நீதிமன்றம்முன்பு ஆஜர்படுத்தினர்.உறுதிமொழியை மீறிய 2ரவுடிகளையும் 350 நாட்களைசிறையில் அடைக்க நிர்வாகசெயல்துறை நடுவர் உத்தரவிட்டார்.இதனையடுத்து இருவரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!