திருச்சியில் பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய ரவுடி சிறையில் அடைப்பு

திருச்சியில் பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய ரவுடி சிறையில் அடைப்பு
X
பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய ரவுடி சிறையில் அடைப்பு

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி அரியமங்கலத்தைசேர்ந்த ரவுடியான குலாம் தஸ்தகிர் (வயது 32) கடந்த ஆண்டு நிர்வாக செயல்துறை நடுவர் கோர்ட்டில் ஆஜராகி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை வழங்கினார்.

ஆனால் குலாம் தஸ்தகிர் பிரமாண பத்திர உறுதி மொழியை மீறி வழிப்பறி மற்றும் பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்றசெயல்களில் ஈடுபட்டதால், அரியமங்கலம் போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாநகரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீதுகடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றுமாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture