திருச்சி மாவட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நவம்பர் 1ம்தேதி கிராம சபை கூட்டம்
உள்ளாட்சி தினமான 01.11.2023 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்து இருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சி தினமான 01.11.2023 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 1 ஆம் நாளினை தமிழகத்தின் உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்த நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தில் முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மை காவலர்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களுக்கு கிராம சபை மூலம் பாராட்டு தெரிவித்தல், கிராம ஊராட்சிகளில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல் மற்றும் இணையவழியாக வீட்டுவரி, சொத்துவரி குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரி கட்டணம், மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் கட்டட அனுமதி நடைமுறைப்படுத்தும் பொருட்டு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் கிராம பொதுமக்கள் எளிதாக வரி செலுத்துதல் மற்றும் இரசீது பெறுதல் போன்றவற்றை இணையவழியில் பெறலாம் என்ற விவரத்தினை கிராம மக்களுக்கு தெரிவித்தல் பற்றி எடுத்துக்கூற வேண்டும்.
எனவே, உள்ளாட்சி தினமான 01.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu