திருச்சியில் விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

திருச்சியில் விஜயபாஸ்கர் அண்ணன்  வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
X
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
திருச்சியில் விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார், உறவினர் குருபாதம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 6 மாவட்டங்களில் உள்ள 43 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் அடுத்த ராமச்சந்திரன் நகர் எஸ்.ஏ.எஸ். அபார்ட்மெண்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார் வீட்டிலும், திருச்சி கிராப்பட்டி காந்தி நகர் முதல் தெருவில் வசிக்கும் அவரது உறவினர் குருபாதம் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!