திருச்சியில் காந்தி முகமூடி அணிந்து பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வு

திருச்சியில் காந்தி முகமூடி அணிந்து பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வு
X

திருச்சியில் காந்தி முக மூடி அணிந்த பள்ளி குழந்தைகள்.

திருச்சியில் காந்தி முகமூடி அணிந்து பள்ளி குழந்தைகள் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காந்தி முக மூடி அணிந்து மக்கள் சக்தி இயக்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது விலக்கு மற்றும் போதை ஒழிப்பு கையெமுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு தீர்மானத்தின்படி இந்த ஆண்டு பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பொன்மலை பகுதியில் பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மகாத்மா காந்தி போல் முகமூடி அணிவித்து மாணவர்கள் சிலம்பம் சுழற்றி மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்புக்கு எதிரான உறுதி மொழியை ஏற்றனர்.


காந்தி முகமூடி அணிந்து திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு கையெழுத்து இயக்கம் பொன்மலை பகுதியில் சிலம்பாட்டம் விளையாடி தொடங்கப்பட்டது.

இதில் வளமான வாழ்வுக்கும், உயர்வுக்கும் முழுமையான மதுவிலக்கை போதைப் பொருள் ஒழிப்பை ஆதரிப்பீர்,

நல்ல மது என்று அருந்தினால், அது மெல்ல மெல்லக் கொல்லும்; கள்ள மதுவோ உடனே கொல்லும் ,

இயற்கைக்கு முரணானது போதை! இல்லறத்துக்கு எதிரானது போதை!

உடலையும் கெடுத்து, உயிரையும் பறித்து குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைக்கும் மதுவை நாடலாமா? என்று பரப்புரை செய்யப்பட்டது.

இதில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைச் செயலாளர் ஆர்.இளங்கோ, நிர்வாகிகள் குமரன், தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார், நிர்வாகி ஆர்.கே.ராஜா, மோகன் ,தமிழ்நாடு சிலம்பம் இளையோர் சம்மேளனம் செயலாளர் நவீன் மற்றும் சிலம்ப மாணவர்கள், வீரமங்கை வேலுநாச்சியார் இளையோர் சங்க செயலாளர் கலை இளமணி சுகித்தா பயிற்சியாளர்கள் மோகன், ராஜ்குமார், கோ.காசிலிங்கம், சூரியபிரகாஷ், மா.த.ரேஷ்விந்த், யாதேஷ் ,ராகவி, ஜீவிதா, மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself