திருச்சி பள்ளியில் நடைபெற்ற நூல்களை வாசிப்போம் நேசிப்போம் நிகழ்ச்சி
பள்ளி குழந்தைகளுடன் வாசிப்பு இயக்க நிர்வாகிகள்.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் திருச்சி கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பொது அறிவைத் தரும் பொழுதுபோக்கு நூல்களை வாசிப்போம் நேசிப்போம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சைவராஜு தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் பொது அறிவை தரும் பொழுதுபோக்கு நூல்களை வாசிப்போம் நேசிப்போம் தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உலக அளவில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் இருக்கின்றன. அதில் பொது அறிவை தரும் பொழுதுபோக்காக சேகரிப்பு கலைகள் உலக அளவில் பல உள்ளன. அஞ்சல் தலை சேகரிப்பினை பிளாட்டலி என்பர். அஞ்சல் தலை குறித்த ஆய்வு ஆகும். ஒரு கருபொருட்களில் அஞ்சல் தலை, சிறப்பு அஞ்சல் உறை, அஞ்சல் முத்திரையை சேர்ப்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
நாணயவியல் என்பது நாணயங்களைப் பற்றிய ஆய்வு ஆகும்.வரலாற்றை, குறிப்பாக பண்டைய வரலாற்றை ஆய்வு செய்வதற்கு இது முக்கியமானது. ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வரலாறு ஒரு பெரிய அளவிற்கு நாணயவியல் மூலம் கட்டமைக்கப்படுகிறது மற்றும் வரலாற்று உண்மைகள் பெரும்பாலும் நாணயவியல் கண்டுபிடிப்புகளால் உறுதிப்படுத்தப்படுகின்றன. பண்டைய இந்தியாவின் நிர்வாகம், வரலாறு, புவியியல் மற்றும் மத வரலாறு ஆகியவற்றுடன் தொடர்புடைய பல உண்மைகள் நாணயவியல் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், பொட்டின் , அலுமினியம், நிக்கல், பெராட்டிக் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவற்றால் செய்யப்பட்ட பழங்கால, இடைக்கால மற்றும் நவீன இந்திய நாணயங்களின் வரலாறு சுவாரசியமானது. பொது பயன்பாடு நாணயங்கள், நினைவார்த்த நாணயங்கள், புழக்கத்தில் விடப்படாத நாணயங்கள், அக்கச்சாலை நாணயங்கள் என உள்ளன.
நோட்டாபிலி என்பது பணத்தாள்கள் பற்றிய ஆய்வு ஆகும்.பணத்தாள்கள் சேகரிப்பு என்பது ஒரு உலகளாவிய பொழுதுபோக்காகும். பணத்தாள் சேகரிப்பாளர்கள் நாடுவாரியாக பணத்தாள்களை சேகரிப்பது, குறிப்பிட நில அமைப்பின் படி பணத்தாள்களை சேகரிப்பது,
பணத்தாள்களில் தலைவர்கள், விலங்குகள், பறவைகள் படமிட்ட பணத்தாள்களை சேகரிப்பது
ஒரு குறிப்பிட்ட நாட்டின் அனைத்து பணத்தாள்களையும் சேகரிப்பது காகிதம், பாலிமர், பிலாஸ்டிக் போன்ற மூலக்கூறுகளிலும் வெளிவரும் பணத்தாள்கள், நட்சத்திர குறியீடு உள்ள பணத்தாள்களை சேகரிப்பது என ஈடுபடுகிறார்கள்.இதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரம் கலை கலாச்சாரம் பண்பாட்டினை அறியலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஆசிரியை ஸ்ரீவித்யா வரவேற்க நிறைவாக ராஜேஸ்வரி நன்றியுரை ஆற்றினார். ஆசிரியர்கள் சாந்தினி பரமேஸ்வரி உட்பட பள்ளி மாணவர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu