வைரமணி தலைமையில் திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

வைரமணி தலைமையில் திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
X

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வைரமணி தலைமையில் நடந்தது.

மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க.செயற்குழு கூட்டம் தில்லைநகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி முன்னிலையில் அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது..

இக்கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகங்களில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடியேற்றி இனிப்புகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ் , செயற்குழு உறுப்பினர் செவந்தி லிங்கம், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், அவைத் தலைவர் தர்மலிங்கம், பகுதி செயலாளர்கள் கண்ணன் காஜாமலை விஜி,ராம்குமார், மோகன்தாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!