வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் ரயில்களை நிறுத்த ஏற்பாடு

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் ரயில்களை நிறுத்த ஏற்பாடு
X
வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் சில ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் கொல்லம் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நாளை (15-ம் தேதி) வரை 3 நாட்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5.30 மணிக்கு வந்து, 5.51 மணிக்கு புறப்படுகிறது. இதே போல் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9.35 மணிக்கு வந்து 9.36-க்கு புறப்படும்.

இதே போல் சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.35-க்கு ஸ்ரீரங்கம் வந்து, அங்கிருந்து இரவு 9.36-க்கு புறப்படுகிறது. இதே போல் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 9.13-க்கு வந்து, 9.14-க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!