திருச்சி மாநகரில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பரிசு

திருச்சி மாநகரில்  கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பரிசு
X

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

திருச்சி மாநகரில் க கொரோனா தடுப்பூசி போட்டு க்கொண்டவர்களில் 27 பேருக்கு மாநகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை ஒழிப்பதற்கு தமிழக அரசு ச மாபெரும் முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் திருச்சியில் கடந்த 19ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது‌.

திருச்சி மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமில் கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் மட்டும் 34 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது .இந்த பரிசுத் திட்டத்தில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 பேருக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் பரிசாக மகேஸ்வரி என்பவருக்கு கியாஸ் அடுப்பும், இரண்டாவது பரிசாக பாபுலால் என்பவருக்கு கேரம் போர்டும், மற்றும் 25 பேருக்கு தலா ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்