நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்களுக்கு 30 சின்னம் தயார்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள். 490 பேரூராட்சிகளின் 12ஆயிரத்து,838 உறுப்பினர் பதவி இடங்களுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அக்கட்சிகளின் தகுதி அடிப்படையில் அதாவது தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சிகள் அல்லது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற கட்சி என்ற விகிதத்தின் அடிப்படையில் கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடும் வேட்பாளருக்கு கட்சி அளிக்கும் அங்கீகார கடிதத்தின் அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்படும்.
இது ஒருபுறமிருக்க சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் தனியாக ஒதுக்கப்பட வேண்டும் என்பது மரபு. அந்தவகையில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படுவதற்காக அசைந்தாடும் நாற்காலி, முகம் பார்க்கும் கண்ணாடி, பாட்டில், பேட்ஜ், ஸ்பேனர், வைரம், உலக உருண்டை, ஊஞ்சல், நீர்க்குவளை, சாலை உருளை, பூப்பந்து மட்டை, திருகாணி, கோட் ,கோப்பு அடுக்கும் அலமாரி, முள்கரண்டி, கட்டில் ஹாக்கி பேட் பந்து, மகளிர் பணப்பை, நடை தடி, மேஜை விளக்கு, இசைக்கருவி, கைப்பை, தீப்பெட்டி,டை, அலமாரி, குலையுடன் கூடிய தென்னை மரம் ,அரிக்கேன் விளக்கு, ஸ்பூன், தண்ணீர் குழாய் ஆகிய 30 சின்றங்கள் தயார் நிலையில் இருக்கிறது. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் நாளான பிப்ரவரி 7ஆம் தேதி இந்த சின்னங்கள் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu