நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருச்சி மாவட்டத்தில் 1,926 பேர் போட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:  திருச்சி மாவட்டத்தில் 1,926 பேர் போட்டி
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 398 பதவியிடங்களுக்கு 1,926 பேர் போட்டியிடுகின்றனர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் வருகிற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் 21 மாநகராட்சி உட்பட அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கும். இந்நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி 4-ந்தேதி முடிவு பெற்றது. பின்னர் இன்று மதியம் வரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதற்கு 3 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகள், 5 நகராட்சிகளில் உள்ள 120 வார்டுகளில் போட்டியின்றி தேர்வான 1 வார்டு போக 119 வார்டுகள், 14 பேரூராட்சிகளில் உள்ள 214 வார்டுகளுக்கு சின்னத்துடன் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் உள்ள 120வார்டுகளுக்கு 676 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 12 பேரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 119 பேர் இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் ஒரு வார்டில் போட்டியின்றி ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது போக மீதியுள்ள 119 வார்டுகளில் 544 பேர் போட்டியிடுகின்றனர்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் உள்ள 216 வார்டுகளில் 2 போக 214 வார்டுகளில், 793 பேர் இறுதிப்போட்டியில் பங்கேற்கிறார்கள். இதையடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள 398 வார்டுகளுக்கு 1926 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கி, இறுதி வேட்பாளர் பட்டியல் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!