நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருச்சி மாவட்டத்தில் 4 பேர் வேட்புமனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருச்சி மாவட்டத்தில் 4 பேர் வேட்புமனு தாக்கல்
X
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வருகிற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 28-ந்தேதியான நேற்று தொடங்கி வருகிற 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி மற்றும் 5 நகராட்சி, 14 பேரூராட்சிகள் அடங்கும். இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 65 வார்டுகளும், 5 நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 120 வார்டுகளும், 14 பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 216 வார்டுகள் என மொத்தம் 401 வார்டுகளும் அடங்கும். இந்த 401 வார்டுகளிலும் முதல் நாளான நேற்று ஒரு வார்டில் கூட எந்த வேட்பாளரும், வேட்புமனுத்தாக்கல் செய்ய வில்லை.

இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று 29-1-2022-ல் திருச்சி மாநகராட்சியில் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள 6-வது வார்டுக்கு ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல லால்குடி நகராட்சியில் உள்ள 9-வது வார்டுக்கு இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் சிறுகமணி பேரூராட்சியில் உள்ள 7-வது வார்டு ஒருவரும் என மொத்தம் 4 பேர் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை விடுமுறை நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் கிடையாது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!