திருச்சி மாவட்டத்தில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள்

திருச்சி மாவட்டத்தில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள்
X

உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள்.

திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாநகராட்சி 4 கோட்ட அலுவலகங்கள், 5 நகராட்சி அலுவலகங்கள், 14 பேரூராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அதற்கான பணிகள் நடைபெற்று, இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இதில் முதல் நாளான இன்று சுயேச்சைகள் உள்பட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அனைத்து பகுதிகளிலும் வேட்பாளர்கள் சென்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று காலை அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து தயார் நிலையில் இருந்தது. ஒவ்வொரு அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்புடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உண்டான அனைத்து பணிகளும் செய்யப்பட்டிருந்தது.

மேலும் வேட்பாளர்களுக்கு சொந்தமான வீட்டிற்கு உண்டான நிலுவை வரி பாக்கிகளை பலர் கட்டினர். தண்ணீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டி அதற்கான ரசீதுகள் வாங்கியதை பார்க்க முடிந்தது.

Tags

Next Story