நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருச்சி மாநகர் அ.தி.மு.க. செயலாளர் அறிக்கை

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி. என். நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள், வருகின்ற 26.11.2021 முதல் 28.11.2021 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் தென்னூர், அண்ணாநகர், திருச்சி மாநகர மாவட்ட கழக அலுவலகத்தில் உரிய கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் கட்டணத்தொகை ரூ.5000/- ஆகும்.
அதுசமயம் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய நகர பேரூர், கிளை, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ.பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கோட்டத் தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், முன்னாள் தலைமை கழக பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர், பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu