நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் திருச்சி பா.ஜ.க.விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் திருச்சி பா.ஜ.க.விருப்ப மனு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ஜ.க.வினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது.

தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அனைத்துக் கட்சியினரும் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். அதே போல் பாரதீய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தலைவர்கள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் விருப்ப மனுக்களை மாநில துணை தலைவர்கள் ராஜா , சிறப்பு அழைப்பாளர் சம்பத், மற்றும் மாவட்ட தலைவர் ராஜசேகரன் ஆகியோர் பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து இன்று நடைபெற்ற முகாமில் மலைக்கோட்டை மண்டல் செயலாளர் சீனிவாசன் 14-வது வார்டுக்கும், மலைக்கோட்டை மண்டல் ஓ.பி.சி. அணி தலைவர் கதிர்வேல் முருகன் 19-வது வார்டுக்கும் பா.ஜ.க சார்பாக போட்டியிட விருப்ப மனுவை திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரனிடம் வழங்கினர். இதில் மாநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் ஏராளமான நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனு கொடுத்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு