உறையூர் கமலவல்லி நாச்சியார் திருவடி சேவை; நவராத்திரி 5-ஆம் நாள் உற்சவம்
சிறப்பு அலங்காரத்தில் உறையூர் கமலவல்லி நாச்சியார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயில் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரிய இக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது.
இந்த விழாவின் 5-ஆம் நாளான இன்று மூலஸ்தானத்தில்இருந்து புறப்பட்ட தாயார்நவராத்திரிமண்டபம்வந்தடைந்தார்.தொடர்ந்து திருவடிசேவையையொட்டி கமலவல்லிநாச்சியார் சந்திர சூரியன் சவுரிகொண்டை, நெத்தி பட்டை, கலிங்க தொரா, காசுமாலை, முத்து மாலை, பவள மாலை, தங்க நெல்லிக்காய் மாலை வைரத்தால் ஆன பெருமாள் பதக்கம்,வலது ஹஸ்தத்தில் கிளி, இடதுஹஸ்தத்தில் திருவாபரணங்கள்,வைர திருமாங்கல்யம், பாதசலங்கை, தோடா (சிலம்பு ) அணிந்துபிரகார வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு அமுது செய்விக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கொலு ஆரம்பமானது.இதன் பின்னர் தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu