முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடுதல் நிறுத்தங்களில் நிற்க அனுமதி

முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடுதல் நிறுத்தங்களில் நிற்க அனுமதி
X
முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடுதல் நிறுத்தங்களில் நின்று செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தம் இன்றி சென்று வந்தது. இதையடுத்து ரெயில் பயனர்களின் தொடர்ச்சியான கோரிக்கையின் அடிப்படையில், 7 ரெயில்களுக்கான நிறுத்தங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிறுத்தங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி திருச்சியில் இருந்து திருப்பாதிரிபுலியூர் வரை செல்லும் ரெயில் கூடுதலாக வெல்லூர் மற்றும் ஈச்சங்காடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதே போல் திருச்சியில் இருந்து காரைக்கால் வரை செல்லும் ரெயில் கூடுதலாக தொண்டைமான் பட்டி, குடிகாடு, அம்மாபேட்டை, கோவில்வேன்னி, திருமன்திகுளம், அடியக்கமுன்களம், கூத்தூர், சிக்கல், அன்டனம்பேட்டை, வெளிபாளையம், திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் ரெயில் தொண்டைமான்பட்டி, பசுபதிகோவில், அய்யம்பேட்டை, சுவாமிமலை, தாராசுரம், நரசிங்கம்பேட்டை ஆகிய ரெயில் நிறுத்தங்களில் நின்று செல்லும்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி