திருச்சி: மத்திய அமைச்சர்களுக்கு பூங்கொத்து கொடுத்து கலெக்டர் வரவேற்பு

திருச்சி: மத்திய அமைச்சர்களுக்கு பூங்கொத்து கொடுத்து கலெக்டர் வரவேற்பு
X

திருச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

திருச்சிக்கு இன்று வருகை தந்த இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு பூங்கொத்து கொடுத்து திருச்சி கலெக்டர் சிவராசு வரவேற்றார்.

திருச்சிக்கு இன்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி ரயில்வே ஸ்டேசன் வந்தடைந்தார்.அவருக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதனை தொடர்ந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சிவராசு அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Next Story
ai in future agriculture