அடையாளம் தெரியாத முதியவர் தற்கொலை: போலீசார் விசாரணை

அடையாளம் தெரியாத முதியவர் தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

முதியவர் ஒருவர் காவிரி கரையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

திருச்சி சிந்தாமணி தேவதானம் பகுதி காவிரி ஆற்றங்கரையில் மரக்கிளையில் ஆண் உடல் தொங்குவதாக கோட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தற்கொலை செய்தவரின் உடலை கைப்பற்றினர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காவிரி கரையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதும், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் கிரேசிமேரி கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!