வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
திருச்சியில் வெள்ளரிக்காய் விற்று வரும் பெண்களுக்கு குடை மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கிய குடியிருப்போர் நல சங்கத்தினர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் மிகவும் அதிகமாக உள்ளது. வழக்கமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின்போது தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.
மேலும் வெப்ப அலை காரணமாக மக்கள் வெளியில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மத்திய,மாநில அரசுகள் சார்பில் வயதானவர்கள், குழந்தைகள் காலை 11மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த எச்சரிக்கைகளை எல்லாம் மீறி வயிற்றுப்பிழைப்பிற்காக சுட்டெரிக்கும் வெயிலில் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை பார்த்து பரிதாபப்பட்டு வெள்ளரிக்காய் வாங்கி செல்பவர்கள் தான் உண்டு.
ஆனால் திருச்சி சுந்தர் ராஜ்நகர் ஹைவேஸ்காலனி காவேரி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆணயர் ஜெயபாலன் அவர்களின் ஆலோசனைப் படி குட்ஷெட் ரோடு ரயில்வே மேம் பால நடை மேடையில் சுட்டெரிக்கும் வெயிலில் வெள்ளரிப் பழம் விற்கும் வயதான பெண் மணிகள் சுமார் 20 பேருக்கு தி ஹிந்து நாளிதழ் ஆசிரியர் (ஓய்வு )சையது முதாகர் தாசில்தார் (ஓய்வு )எஸ் ஆர் சத்திய வாகீசுவரன் மற்றும் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோருடன் இணைந்து புத்தம் புதிய குடைகள் மற்றும் பெரிய குடிநீர் பாட்டில் கள் ஆகியவற்றை வழங்கினார்கள். சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இந்த நற்செயலை பார்த்து வியந்து பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu