இருசக்கரவாகனம், செல்போன் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

இருசக்கரவாகனம், செல்போன் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
X
திருச்சியில் இருசக்கரவாகனம், செல்போன் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் வழிப்பறி செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 19 -2 -2024-ம் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னை திருச்சி பைபாஸ் ரோடு தனியார் வாட்டர் கம்பெனி அருகில் உள்ள சுடுகாடு முன்பு இரவு 10:30 மணிக்கு ஒருவர் தனது நண்பருடன் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் இருசக்கர வாகனத்தை வழிமறித்து மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டி இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்யப்பட்டது. இதில் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்தது திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த நாகேஷ் (வயது 19 )மற்றும் 3 நபர்கள் என தெரிய வந்தது .வழிப்பறி செய்தவர்கள் இவர்கள் தான் விசாரணையில் உறுதி செய்யப்பட்டதால் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் விசாரணையில் நாகேஷ் என்பவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு மற்றும் ஒரு அடிதடி வழக்கு என இரண்டு வழக்குகளும் கோட்டை காவல் நிலையத்தில் இரண்டு வழிப்பறி வழக்குகளும் கேகே நகர் காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு என மொத்தம் ஐந்து வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

எனவே அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அதனை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, நாகேசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நாகேசிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை சார்வு செய்யப்பட்டது.

திருச்சி மாநகரில் இதுபோன்று வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது