திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கத்துடன் இருவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கத்துடன் இருவர் கைது
X

திருச்சி சர்வதேச விமான நிலையம் (கோப்பு படம்).

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணி தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து எடுத்து வந்த 865 கிராம் எடையில் உள்ள தங்க சங்கிலி மற்றும் சிறிய அளவிலான தங்க கட்டியை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்த யாசர்( 32 )என்பது தெரியவந்தது. இதுபோல மற்றொரு பயணியான திருச்சியை சேர்ந்த ஜாகிர் உசேன் (36 )பசை வடிவில் மறைத்து கடத்தி வந்த ஒரு கிலோ 83 கிராம் எடையுள்ள தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன்படி இரண்டு பயணிகளிடமும் இருந்து மொத்தம் ஒரு கிலோ 948 கிராம் எடையில் ரூ. ஒரு கோடியே 13 லட்சத்து 28 ஆயிரத்து 890 மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் படத்தில் ஈடுபட்ட இரண்டு பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் தொடர்பாக இது போல் அடிக்கடி சிக்கிக் கொள்வது உண்டு. ஆனால் தற்போது மிகப்பெரிய வேட்டையாக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business