திருச்சியில் விபச்சார வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் விபச்சார வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
திருச்சியில் விபச்சார வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது/

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படி கடந்த 12.04.22-ந்தேதி இ.பி. ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட வீட்டை சோதனை செய்தபோது கதிர்வேல் (வயது 33,) மற்றும் ராணி( வயது 51 ) ஆகியோர் 4 இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. உடனே எதிரிகளை கைது செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கதிர்வேல் மற்றும் ராணி ஆகியோர் தொடர்ந்து இளம்பெண்களின் வறுமையை பயன்படுத்தி விபசாரத்தில் ஈடுப்படுத்துவார்கள், சமூக விரோதசெயல்கள் புரிவார்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணை இன்று சார்வு செய்யப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்